மாணவி புடவையில் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அருகே கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா (16). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபோது, படிப்பில் கவனம் செலுத்தாமல் எந்நேரமும் செல்போனில் ஹரிதா விளையாடிக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால், கடும் மனஉளைச்சலில் ஹரிதா இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனி அறையில், ஹரிதா தூங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து, பெற்றோர் அறையின் கதவை தட்டிப்பார்த்துள்ளனர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, புடவையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து ஹரிதாவின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post மாணவி புடவையில் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: