மகளிர் உள்ஒதுக்கீடு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனங்களை சார்ந்த மகளிருக்கு அதில் உள் ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் சமூகநீதி அர்த்தமிழந்து போகும். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறைக்கப்படுவதையும் வடமாநில தொகுதிகள் அதிகரிக்கப்படுவதையும் ஒருபோதும் ஏற்க இயலாது. மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜ அரசு உடனடியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

The post மகளிர் உள்ஒதுக்கீடு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: