புதிய சிட்ரான் சி3 ஏர்கிராஸ்

பிரஞ்சு நிறுவனமான சிட்ரான், சி3 ஏர்கிராஸ் என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 110 பிஎஸ் பவரையும், 1,750 ஆர்பிஎம்-ல் 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இந்தக் கார் லிட்டருக்கு 18.5 கி.மீ மைலேஜ் வழங்கும் என அராய் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் யு, பிளஸ் மற்றும் மேக்ஸ் என 3 வேரியண்ட்கள் உள்ளன. 5 சீட் மற்றும் 7 சீட் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். ஹில் அசிஸ்ட், டயரில் எவ்வளவு காற்று உள்ளது என்பதை கண்காணிக்கும் அமைப்பு, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.9.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வாகன டெலிவரி அக்டோபர் 15ல் துவங்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post புதிய சிட்ரான் சி3 ஏர்கிராஸ் appeared first on Dinakaran.

Related Stories: