அதே நேரத்தில், குழந்தைகளுக்கு தனி இருக்கை மற்றும் பெர்த் தேவைப்படும் பட்சத்தில் முழு கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் குழந்தைகளுக்கான பயண விதிமுறைகளை மாற்றியதன் மூலம் இந்திய ரயில்வே கடந்த 7 ஆண்டுகளில் ரூ.2,800 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வாயிலாக இந்த விவரங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், சந்திரசேகர் கவுர் என்பவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே தகவல் சேவை மையம் அளித்த பதிலில்; ரயில்களில் குழந்தைகள் பயண கட்டண விதிமுறையில் செய்யப்பட்ட மாற்றத்தால், கடந்த 7 ஆண்டுகளில், ரூ.2 ஆயிரத்து 800 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக, 2022-2023 நிதிஆண்டில், ரூ.560 கோடி கூடுதல் வருவாயும், குறைந்தபட்சமாக 2020-2021 நிதிஆண்டில் ரூ.157 கோடி கூடுதல் வருவாயும் கிடைத்தது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post சிறார்களுக்கான ரயில் டிக்கெட் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ.2800கோடி வருவாய்: RTI தகவல் appeared first on Dinakaran.