ஆளுநரை நீக்கக் கோரி 50 லட்சம் கையெழுத்து; ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தார் வைகோ

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநரை நீக்கக் கோரிய 50 லட்சம் தமிழக பிரதிநிதிகளின் கையெழுத்து படிவத்தை வைகோ ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,‘‘தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும், தமிழ்நாடு அரசுக்கு கேடு விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயகத்திற்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் செயல்படுகிறார். அதனை அவரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 35 சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் மாநிலத்தின் பொதுமக்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட பிரதிகளை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேரில் வழங்க கடந்த சில தினங்களாக அனுமதி கேட்ட போது அது நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் எப்போது அனுமதி வழங்கினாலும் 50 லட்சம் பிரதிநிதிகளின் கையெழுத்து படிவங்களை நேரில் சென்று ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நேற்று பிற்பகல் அனுமதி வழங்கப்பட்டதால்,‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவியை நீக்கக் கோரிய 50 லட்சம் தமிழக பிரதிநிதிகளின் கையெழுத்து அடங்கிய படிவங்களை ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தார். அப்போது மதிமுக எம்பி கணேசமூர்த்தி உடன் இருந்தார்.

The post ஆளுநரை நீக்கக் கோரி 50 லட்சம் கையெழுத்து; ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தார் வைகோ appeared first on Dinakaran.

Related Stories: