சென்னை: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், கூட்டத்தில் கட்சியின் அவை தலைவர் பூவை மு.ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் இதுவரை அதிமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளோம். அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தாலும், நாங்கள் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருப்போம். ஒரே நாடு ஒரே தேர்தலில் அதிமுக எடுக்கும் முடிவை நாங்கள் ஆதரிப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியை கேட்போம். அண்ணாமலை நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அண்ணாமலை நடந்து வருகிறார், அவருடன் ஒரு கூட்டமும் நடந்து வருகிறது அவ்வளவுதான். இதில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
The post அண்ணாமலை நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: மு.ஜெகன்மூர்த்தி பேச்சு appeared first on Dinakaran.