கடந்த மாதம் ஏர்டெல் நிறுவனம் Xstream AirFiber சேவையை குறைந்தபட்ச கட்டணமாக ரூ.799 உடன் தொடங்கியுள்ளது. பொதுவாக ஏர்ஃபைபர் சேவையை பயன்படுத்த கேபிள்கள் தேவையாக இருக்கும். ஆனால், ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொழில் நுட்பத்துடன் அறிமுகப்படுத்தி உள்ள இந்த ஏர்ஃபைபர் கேபிள்கள் இல்லாமல் PLUG AND PLAY என்ற முறையில் 1.5 ஜிபிபிஎஸ் வரை அல்டரா ஸ்பீட் சேவையை வழங்கவுள்ளது. அதிவேக இணையத்தள சேவை என்பதால் ஆன்லைன் கேமிங், உயர்தர வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். கண் இம்மைக்கும் நேரத்தில் பெரிய கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
விரிவான கவரேஜ் இருப்பதால் தொலைதூர பகுதிகளில் சென்றடைவது மூலம் சிக்கலான இடங்களிலும் இணையதள சேவையை பெற முடியும். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு திட்டங்களை அறிமுகபப்டுத்தும் ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபர் ஆன்லைன் ஆச்சுறுத்தல்களில் இருந்து தரவுகளை பாதுகாக்கும் வலுவான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக இணையத்தை தவிர, ஜியோ ஏர்ஃபைபர் குரல் அழைப்பு சேவைகளையும் வழங்குகிறது.
The post நவீன தொழில்நுட்பத்தில் கால் பாதிக்கும் ஜியோ ஏர்ஃபைபர்: சிறப்பம்சங்களை வெளியிட்டது ரிலையன்ஸ் குழுமம் appeared first on Dinakaran.
