இன்று 384 விநாயர் சிலைகள் கரைப்பு

 

கோவை, செப்.20: கோவை நகரில் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் 384 விநாயகர் சிலைகள் குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளங்களில் இன்று கரைக்கப்படுகிறது. சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படவுள்ளனர். சென்னையில் இருந்தும் சிறப்பு படை போலீசார் கோவை வந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

1000 கண்காணிப்பு கேமராக்கள் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் இடங்களில் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் நடைபெறும் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கவும், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கோவையில் நடைபெறும் ஊர்வலத்தை கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சிலை கரைப்பு ஊர்வலத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படுத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என நகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

அவர்களை அழைத்து வரும் ஊர்வல ஏற்பட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். வரும் 22ம் நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 271 சிலைகள் கரைக்கப்படும். பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 27 சிலைகளும் கரைக்கப்படுகிறது. முத்தண்ணன்குளம், வெள்ளலூர் குளங்களில் இந்த சிலைகளை கரைக்கவும், குறிப்பிட்ட பாதைகளில் மட்டும் ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நகர போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தெரிவித்தார்.

The post இன்று 384 விநாயர் சிலைகள் கரைப்பு appeared first on Dinakaran.

Related Stories: