இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட், நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘திருமணமான தம்பதிக்குள், வேண்டுமென்றே உடலுறவு கொள்ள மனைவி மறுப்பது கொடுமையானது. தம்பதிக்குள் ‘செக்ஸ்’ இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடானது. திருமணமாகி 35 நாட்கள் மட்டுமே வாழ்ந்த தம்பதிக்கு, குடும்ப நீதிமன்றம் விவாகரத்து உத்தரவு வழங்கி உள்ளது. அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக மனுதாரர் (மனைவி) கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை.
தனது மாமியார் வீட்டில் வெறும் 35 நாட்கள் மட்டுமே மனுதாரர் வாழ்ந்துள்ளார். அதனால் எதிர்மனுதாரரின் (கணவர்) திருமண உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களது திருமணம் முழுமையாக நடைபெறவில்லை. அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக, இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், எதிர்மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதை புறக்கணிக்க முடியாது. வரதட்சணைக் கொடுமை தொடர்பான வழக்கை, அடுத்தடுத்த விசாரணையில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே விவாகரத்து உத்தரவுக்கு எதிரான மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
The post 35 நாளில் தாய் வீட்டிற்கு சென்றுவிட்ட மனைவி ‘செக்ஸ்’ இல்லாத திருமண வாழ்க்கை சாபக்கேடு: விவாகரத்தை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.
