எடப்பாடி உத்தரவிட்டால் அண்ணாமலை நடமாட முடியாது: அதிமுக மாஜி எம்பி கடும் எச்சரிக்கை

திருத்தணி: திருத்தணியில் நேற்றிரவு நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரி பேசியதாவது:
தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது, சமஉரிமை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு அண்ணா தான் காரணம். ஏழை, எளிய சாமானிய மக்கள் கூட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஆக முடியும் என்றால் அதற்கு காரணம் அண்ணா. அண்ணாமலை நீ உனக்கு கொடுத்திருக்கிற வேலையை பண்ணனும், உன் கட்சியை வளர்க்கிறதுக்கு நீ நடைபயணம் போய் ஏதாவது பண்ணு. அண்ணா பற்றி உனக்கு என்ன தெரியும்?

நாங்க எல்லாம்தமிழ்நாட்டிற்கு எதையுமே பண்ணாத மாதிரி பேசுகிறாய், உனக்கு என்ன தெரியும்? எதை வச்சு சொல்லிட்டு இருக்குற? ஏன்டா பிரதமராக இருக்கின்ற நரேந்திர மோடி அருகிலேயே வைத்துக் கொண்டிருக்கிற ஒரு தலைவர் இந்தியாவிலே எங்க அண்ணன் எடப்பாடியார்தான். ஒரு தலைவர் என்று சொன்னால் அது புரட்சி தமிழன் எடப்பாடி. அவர் இதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

முதல்ல அம்மாவை பத்தி சொன்ன, இப்ப அண்ணாவை பத்தி சொல்ற, எங்களோடு தான் கூட்டணி தவிர நாங்கள் பிஜேபி தலைமையில் அல்ல என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ளவேண்டும். பிஜேபி தலைவரில் இருந்து விலகிடு, பிஜேபி தலைவர் பதவியில் இருந்து போயிடு, நீ தனியா போயிடு நீ செய்கின்ற ஒவ்வொரு வேலையும் என்னவோ அதை விட்டு அதிமுகவையும் தொண்டர்களையும் சீண்டி பார்க்கின்ற வேலையை வைத்துக் கொள்ளக்கூடாது. உன்னுடைய பாதயாத்திரை வேறு யாத்திரையாக போய்விடும் என்பதை இந்த நேரத்திலே கடுமையாக எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிமுக தொண்டன் பொங்கி எழுந்தால் நீ காஞ்சிபுரம் பக்கமே வர முடியாது. சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய பேச்சாற்றலால் இந்த நாட்டு மக்களையும் மிட்டா மிராசுகளை மிரளவைத்து ஒரு பெரிய இயக்கத்தை கொண்டு வந்து சாதாரண மக்கள் ஆட்சியை தந்து இன்றைக்கு அனைவருக்கும் சம உரிமை தந்தவர் அண்ணா. அப்படிப்பட்ட அண்ணாவை பற்றி சொல்கிறாய், இனியும் இது போன்ற செயல்களை ஈடுபடுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நிறுத்திக்கொள்ளாவிட்டால் எடப்பாடியாரின் அனுமதி பெற்று அண்ணாமலை இந்த பக்கமே வராமல் செய்திட முடியும் என்பதை சொல்லி கொள்கிறேன்.

The post எடப்பாடி உத்தரவிட்டால் அண்ணாமலை நடமாட முடியாது: அதிமுக மாஜி எம்பி கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: