கோவை மாநகராட்சி 9-வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்க ரூ.13 லட்சம்

கோவை, செப். 16: கோவை மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோ-ஆப்ரேட்டிவ் காலனி பிரதான சாலையை ”நமக்கு நாமே” திட்டத்தின்கீழ் புனரமைக்க கிரீன் பீல்ட்ஸ் ஹவுசிங் இந்தியா பிரைவேட் நிறுவனம் சார்பில் ரூ.13 லட்சம் நிதி வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கான காசோலையை இந்நிறுவன இயக்குனர்கள் சதாசிவம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப்பிடம் வழங்கினர். இதனுடன் அரசு பணமும் சேர்த்து மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை 5வது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் செய்துள்ளார். மாநகராட்சி கமிஷனரிடம் காசோலை வழங்கும்போது திமுக மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, 9வது வார்டை சேர்ந்த மணி (எ) பெரியசாமி, வார்டு செயலாளர் மயில்சாமி, மனோஜ், அருண், நந்தகுமார், அருள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post கோவை மாநகராட்சி 9-வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்க ரூ.13 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: