ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய பிஎப் அலுவலக ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் வாஷியில் செயல்பட்டு வரும் தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்று கடந்த 2002ம் ஆண்டு முதல் வருங்கால வைப்பு நிதி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நிறுவனத்துக்கு 2008 ஜுலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் வாஷி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றிய கல்லக்குறி விஜய்(52) என்பவர் பிரச்னையை தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு அது ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய புலனாய்வு பிரிவினர் ஆலோசனையின்படி, ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கல்லக்குறி விஜய் 2008 ஆகஸ்ட் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கல்லக்குறி விஜய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய பிஎப் அலுவலக ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: