இந்நிலையில், துருவி துருவி விசாரணை நடத்தியதில் ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட குங்கும பூவையும் ஓமனில் இருந்து கடத்தி வந்துள்ளனர். ஒரே விமானத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் சுங்கத்துறையிடம் சிக்கினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post ஓமனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ தங்கம் உள்பட ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; 113 பேர் சிக்கினர்..!! appeared first on Dinakaran.
