கொருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.22 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்

கும்பகோணம்,செப்.15: தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கும்பகோணம் தொகுதி, கொருக்கை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை அன்பழகன் எம்எல்ஏ மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முன்னதாக, கொருக்கை ஊராட்சி கடை வீதியில் திமுக கொடியேற்றி பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி, உதவி செயற்பொறியாளர் சிவபிரகாசம், மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார், பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் கரிகாலன், அன்பழகன், ஒன்றிய பொருளாளர் இளங்கோ, சோழபுரம் பேரூர் திமுக செயலாளர் ஜெப்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர் சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பகவான்தாஸ், துணைத்தலைவர் சாரங்கன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் நெடுமாறன், மாரியப்பன், கலியமூர்த்தி, ஆனந்தன், மூர்த்தி, பாலமுருகன், மகாபிரபு, முருகானந்தம், ரகு, முத்துராஜ், செல்வமணி, குணாலன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கொருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.22 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: