‘புதுகையில என்ன ஸ்பெஷலோ வாங்கிட்டு வாங்க’ ரெய்டு நடத்த போனாங்களா… சாப்பாடு தேடி போனாங்களா… கூகுளில் தேடி ஆர்டர் செய்து வெளுத்து கட்டிய அமலாக்கத்துறை

புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கடந்த 12ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில், புதுக்கோட்டை முத்துப்பட்டினம் கிராமத்தில் ராமச்சந்திரனின் வீடு மற்றும் அவரது நண்பர், உறவினர் வீடு உட்பட 6 இடங்களில் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் 2ம் நாளாக ராமச்சந்திரன் வீட்டில் சோதனை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று 3வது நாளாக நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தது. மாலை சோதனையை நிறைவு செய்து பண்டல், பண்டலாக ஆவணங்களை பெட்டியில் வைத்து அதிகாரிகள் 3 கார்களில் எடுத்து சென்றனர்.

3 நாட்களாக சோதனை நடந்த நிலையில் அதிகாரிகள் ஸ்நாக்ஸ் மற்றும் சாப்பாடு ஏற்பாடுக்கு 2 டீம் வைத்திருந்தனர். அந்த டீம் வாங்கி வரும் ஸ்நாக்ஸ் நல்லா இருந்தால், அடுத்த இடத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாங்கிய இடத்தை சொல்லி வாங்கி சாப்பிட அறிவுறுத்தினர். நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேடி, தேடி வாங்கி வர சொல்லி சாப்பிட்டுள்ளனர். இதனால் டிரைவர்கள் சாப்பாடு வாங்குவதையே முழுநேர பணியாக செய்தனர். புதுக்கோட்டையில் என்ன சாப்பாடு ஸ்பெஷல் என கூகுளில் தேடிய அதிகாரிகள் முட்டை மாஸ், கொத்து புரோட்டா ஆகியவற்றை இந்த 3 நாட்களில் அதிகம் முறை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதேபோல் மாலை நேரத்தில் சூடான சமோசா வாங்கி சாப்பிட்டிருக்கின்றனர். சைவ சாப்பாடு பிரியர்கள் புதுகை மகளிர் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

The post ‘புதுகையில என்ன ஸ்பெஷலோ வாங்கிட்டு வாங்க’ ரெய்டு நடத்த போனாங்களா… சாப்பாடு தேடி போனாங்களா… கூகுளில் தேடி ஆர்டர் செய்து வெளுத்து கட்டிய அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Related Stories: