கோவை, செப்.14: கோவை பாரதியார் பல்கலை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி கோவை இந்துஸ்தான் கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக இன்று (14ம் தேதி) முதல் வரும் 16ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்போட்டியை துவக்கி வைக்க உள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 92 கல்லூரிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்க உள்ள இந்த போட்டியில் முதல் ஒன்றரை நாளில் குழு போட்டியும், அடுத்த ஒன்றரை நாளில் தனி நபருக்கான போட்டியும் நடைபெற உள்ளது. குழு போட்டி மற்றும் தனிநபர் போட்டியில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். மேலும் தனிநபர் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிப்பவர்கள் தென்னிந்திய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியை பெறுவார்கள்.
The post கோவை பாரதியார் பல்கலை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி இன்று துவக்கம் appeared first on Dinakaran.