நேரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

கோவை, செப் 14: கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பிஇ, பிடெக், எம்இ, எம்பிஏ, பிரிவுகளுக்கு 2023 – 2024 கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கடந்த 11ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில டீமோ ஈவா வெல்னஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் என். இளங்கோவன் கலந்து கொண்டார். கல்லூரி மனிதவளத்துறை தலைவர் ஹேமமாலினி வரவேற்புரையாற்றினார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் முனைவர் ப.மணியரசன் கல்லூரியின் சிறப்புகளையும், சாதனைகளையும் எடுத்து கூறினார். இந்த விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் பா.கிருஷ்ணகுமார், நேரு கல்வி குழுமங்களின் செயல் இயக்குனர் (கல்வி மற்றும் நிர்வாகம்) முனைவர் எச் என். நாகராஜா, ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post நேரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: