கோவை, செப் 14: தென்காசி மாவட்டத்தில் 2வது புரோ கோப்பைக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த கேஷிகா தினேஷ்குமார் கலந்து கொண்டார். அவர் 37 கிலோ எடை பிரிவில்க்யோரிகி (சண்டை), பூம்சே ஆகிய 3 போட்டியில் பங்கேற்று 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினார். அவரை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கேஷிகா தினேஷ்குமார் வேல்ஸ் சர்வதேச பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டேக்வாண்டோ போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று மாணவி சாதனை appeared first on Dinakaran.