இனி நீண்ட நேரம் வாக்குச்சீட்டை வைத்திருக்க முடியாது தேர்தல் பணியாளர்களின் தபால் ஓட்டுக்கு புதிய விதி: நியமித்த மையத்திலேயே வாக்கு செலுத்த வேண்டும்

இனி நீண்ட நேரம் வாக்குச்சீட்டை வைத்திருக்க முடியாது தேர்தல் பணியாளர்களின் தபால் ஓட்டுக்கு புதிய விதி: நியமித்த மையத்திலேயே வாக்கு செலுத்த வேண்டும்புதுடெல்லி: தேர்தல் பணியாளர்கள் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட வாக்கு மையத்திலேயே தங்கள் வாக்கை செலுத்த வேண்டுமென்ற புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு போடும் நடைமுறை உள்ளது. இவர்கள் தங்கள் ஓட்டை தொகுதி அலுவலர் அலுவலகத்தில் சென்று செலுத்தலாம். அல்லது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்குள் தபாலில் அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு தபாலில் வாக்கை அனுப்பி வைப்பவர்கள் கடைசி நிமிடத்தில் சென்று சேருமாறு அனுப்புகின்றனர். மேலும், நீண்ட நேரம் அவர்கள் தபால் ஓட்டை கையில் வைத்திருப்பதால் அந்த நபர், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தேவையற்ற செல்வாக்கு, அச்சுறுத்தல்கள், லஞ்சம் மற்றும் பிற நெறிமுறையற்ற வழிமுறைகளுக்கு மிகவும் பாதிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது.

எனவே, சட்ட அமைச்சகம் விதியில் புதிய பிரிவு 18ஏ-வை சேர்த்துள்ளது. இதன்படி, தேர்தல் பணியாளர்கள் தங்கள் தபால் வாக்குச் சீட்டைப் பெற்று, அவர்கள் பணி நியமிக்கப்பட்ட மையத்தில் மட்டுமே வாக்கு செலுத்த வேண்டும். இந்த புதிய விதி ஆகஸ்ட் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் நியமிக்கப்பட்ட மையத்திலேயே தபால் ஓட்டை செலுத்த வேண்டியிருக்கும்.

The post இனி நீண்ட நேரம் வாக்குச்சீட்டை வைத்திருக்க முடியாது தேர்தல் பணியாளர்களின் தபால் ஓட்டுக்கு புதிய விதி: நியமித்த மையத்திலேயே வாக்கு செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: