ரூ.4.50 கோடி வீட்டை விற்பது தொடர்பாக மோதல்; உச்ச நீதிமன்ற பெண் வக்கீலை கொன்ற முன்னாள் அதிகாரி: 10 மணி நேரமாக ஸ்டோர் ரூமில் மறைந்திருந்தவரை பிடித்தது போலீஸ்

நொய்டா: நொய்டாவில் ரூ.4.50 கோடி சொத்துக்காக உச்ச நீதிமன்ற வக்கீலை கொன்ற முன்னாள் இந்திய தகவல் சேவை அதிகாரி கைது செய்யப்பட்டார். டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்தவர் ரேணு சின்ஹா. 61 வயதான இவர் உச்ச நீதிமன்ற பெண் வக்கீல். இவரது கணவர் நிதின்நாத் சின்ஹா. 62 வயதான இவர் இந்திய தகவல் சேவை(ஐஐஎஸ்) அதிகாரியாக இருந்து 1998ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவர்கள் நொய்டா செக்டார் 30ல் உள்ள ஆடம்பர பங்களாவில் வசித்து வந்தனர். ரேணு சின்ஹாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் வீட்டிலேயே இருந்தார்.

இவர்களது மகன் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தாங்கள் வசிக்கும் வீட்டை விற்க கணவர் நிதின்நாத் முயற்சி மேற்கொண்டார். இதற்காக புரோக்கரிடம் ரூ.55 லட்சம் முன்பணம் வாங்கியிருந்தார். ஆனால் கணவரின் முயற்சிக்கு மனைவி ரேணு சின்ஹா எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மனைவி கழுத்தை நெறித்து கொன்று விட்டு குளியல் அறையில் சடலத்தை போட்டார்.
இதற்கிடையே ரேணு சின்ஹாவின் சகோதரர் அஜய் தனது சகோதரி மற்றும் மைத்துனர் ஆகியோர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்று நொய்டா போலீஸ் கமிஷனர் ஹரிஷ்சந்தரிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் சோதனை செய்த போது குளியல் அறையில் கழுத்தை நெறித்து கொன்ற நிலையில் ரேணு சின்ஹாவின் உடலை கைப்பற்றினர். ஸ்டோர் ரூமில் 10 மணி நேரமாக மறைந்து இருந்த நிதின்நாத் சின்ஹாவை போலீசார் கைது செய்தனர்.

The post ரூ.4.50 கோடி வீட்டை விற்பது தொடர்பாக மோதல்; உச்ச நீதிமன்ற பெண் வக்கீலை கொன்ற முன்னாள் அதிகாரி: 10 மணி நேரமாக ஸ்டோர் ரூமில் மறைந்திருந்தவரை பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: