உன் தமிழை எரிப்பதற்கு எந்த நெருப்புக்கும் சூடு ‘பத்தாது’ : கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை : உன் தமிழை எரிப்பதற்கு எந்த நெருப்புக்கும் சூடு ‘பத்தாது’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபம் மற்றும் அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசின் சார்பில் பாரதியார் மணிமண்டபம் மற்றும் அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜான் கிருஷ்ணழகன் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் பாரதியாரின் நினைவு தினம் குறித்து கவிதை பாணியில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“காலம் படைத்தால்
அவன் கவி
காலத்தைப் படைத்தால்
மகாகவி

நீ மகாகவி

பாரதிக்கு முன்
பாரதிக்குப் பின் என்ற
காலத்தைப் படைத்தாய்

திருவல்லிக்கேணி மயானத்தில்
உன் எலும்பும் தசையும் எரிந்தன

உன் தமிழை எரிப்பதற்கு
எந்த நெருப்புக்கும்
சூடு ‘பத்தாது’

நீ
நெருப்பைச் சுமந்த
கருப்பையில் ஜனித்தவன்,” எனத் தெரிவித்துள்ளார்.

The post உன் தமிழை எரிப்பதற்கு எந்த நெருப்புக்கும் சூடு ‘பத்தாது’ : கவிஞர் வைரமுத்து ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: