காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

 

காஞ்சிபுரம், செப். 11: காஞ்சிபுரத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் (13ம் தேதி) மாலை 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் முகவரியையும், 044-2999 8040 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே, இந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையலாம்.

The post காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: