கோவை நேரு ஸ்டேடியம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

 

கோவை, செப். 11: கோவை வஉசி பூங்கா அருகே நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400மீ தூரத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளம் கடந்த 2008-ல் அமைக்கப்பட்டது. இந்த ஓடுதளம் சேதமடைந்தது காணப்பட்டது. இதையடுத்து, ஓடுதளம் சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு நேரு விளையாட்டு அரங்கில் புதிய ஓடுதளம் அமைக்க ரூ.6.55 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. தவிர, இருக்கைகளை புதுப்பிக்கவும், கழிப்பறைகள் கட்டவும் ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த பழைய சிந்தடிக் ஓடுதளம் அகற்றப்பட்டது. இந்த பணிகள் இரண்டு மாதத்திற்கு மேல் நடந்தது. பின்னர், புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிந்த நிலையில், தார் சாலையின் மீது சிந்தடிக் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மழைக்காலம் துவங்குவதற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post கோவை நேரு ஸ்டேடியம் சீரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.