இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது: ராகுல் காந்தி

டெல்லி: இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். இந்த மாநாட்டின் போது, வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியை சுற்றி பார்ப்பார்கள் என்பதால் பிரகதி மைதானத்தில் செயற்கை நீரூற்றுகள், செயற்கை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் டிஜிட்டல் நீரூற்றுகள், அலங்கார கம்பங்கள், தெற்கு விளக்குகள் போன்றவையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே டெல்லியில் உள்ள குடிசை பகுதியில் தடுப்பு மூலம் மறைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் G-20 மாநாட்டிற்காக டெல்லியில் குடிசை பகுதிகள் திரையிட்டு மறைக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து X வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்; “ஏழை மக்களையும், விலங்குகளையும் இந்திய அரசு மறைக்கிறது; இந்தியாவின் உண்மை நிலையை விருந்தாளிகளிடம் இருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: