இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஆண்டு நிறைவு நாட்டில் வெறுப்பு ஒழியும் வரை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: வெறுப்பு ஒழிந்து நாடு ஒன்றுபடும் வரை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். யாத்திரையின்போது 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் மேற்பட்ட தெருமுனை கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புக்களில் உரையாற்றினார். நடைபயணத்தின்போது 275 கலந்துரையாடல்கள், 100க்கும் மேற்பட்ட முறை உட்கார்ந்து கலந்துரையாடினார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கி நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,‘‘ஒற்றுமை மற்றும் அன்பை நோக்கிய பாரத் ஜோடோ யாத்திரையின் கோடிக்கணக்கான படிகள் நாட்டின் நாளைக்கான சிறந்த அடித்தளமாக மாறியுள்ளன. வெறுப்பு ஒழியும் வரை, இந்தியா ஒன்றுபடும் வரை யாத்திரை தொடரும். இது எனது வாக்குறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஆண்டு நிறைவு நாட்டில் வெறுப்பு ஒழியும் வரை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: