மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

இம்பால்: மணிப்பூரில் 5 மாவட்டங்களில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மணிப்பூர் ராணுவ தடுப்புக்களை அகற்றுவதற்கான போராட்ட அழைப்பை அடுத்து 5 மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும் ஊரடங்கையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். இதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, மேற்கு இம்பால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வும், தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு8 மணி வரையும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்னுபூரில் காலை 5 மணி முதல் பகல் 11மணி வரை மட்டுமே தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு appeared first on Dinakaran.

Related Stories: