கட்டுக்கட்டா வருது பெண்டிங் கேஸ்… மத்திய மகளிர் போலீசில் குவியுது புகார்

கோவை, செப்.7: கோவை துடியலூர் போலீஸ் ஸ்டேஷன், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாநகர போலீஸ் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது. துடியலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்டது. புதிய இணைப்பிற்கு பின் மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் தர கூட்டம் குவிந்து வருகிறது. கடந்த காலங்களில் துடியலூர் எல்லைக்குள் இருந்த புகார் மனுக்குள் மொத்தமாக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது. கட்டுக்கட்டாக வந்த புகார்களை பார்த்த அனைத்து மகளிர் போலீசார் ஆடிப்போய் விட்டனர். இந்த புகார்களை 24 மணி நேரமும் தொடர்ந்து விசாரித்தால் கூட போதாது. இணைப்பு முன் இருந்த வழக்கு விவரங்களை பெண்டிங் இல்லாமல் முடித்து கொடுங்கள்.

எங்களால் ஆன்லைனில், அதாவது சிசிடிஎன்எஸ் திட்டத்தில் பழைய வழக்குகளை பதிவு செய்ய முடியாது எனக்கூறி விட்டனர். பழைய வழக்குகளை மாவட்ட போலீசார் முடித்து விடுங்கள். புதிய புகார்கள் இருந்தால் மட்டும் மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க எனக்கூறி விட்டனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் கூறுகையில்,‘‘இரவு பகலாக பல புகார்கள் வருகிறது. காதல், கள்ளக்காதல் விவகாரங்கள் அதிகமாக வருகிறது. கள்ளக்காதல், காதலித்து ஏமாற்றிய விவகாரங்களை விசாரிக்கிறோம்.

ஆனால் இந்த விவகாரத்தில் வழக்குகள் போட முடியாத நிலைமை இருக்கிறது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண பல மணி நேரமாகி விடுகிறது. மைனர் பெண் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விசாரணை செய்து வருகிறோம். போலீஸ் ஸ்டேஷன் எல்லை அதிகமானதால், புகார்களும் அதிகமாகி விட்டது. கடந்த காலங்களில் குறைந்த புகார்கள் தான் வந்தது. இப்போது நாங்கள் சாப்பிட கூட வெளியே சொல்லாமல் விசாரணை நடத்த வேண்டிய சூழல் உருவாகி விட்டது’’ என்றனர்.

The post கட்டுக்கட்டா வருது பெண்டிங் கேஸ்… மத்திய மகளிர் போலீசில் குவியுது புகார் appeared first on Dinakaran.

Related Stories: