சென்னை: மூக்கையா தேவரின் 44வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான பி.கே. மூக்கையா தேவரின் 44வது நினைவு நாளையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவரின் நினைவிடத்தில், அதிமுக சார்பில், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
The post 44வது நினைவு நாளையொட்டி மூக்கையா தேவர் நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி appeared first on Dinakaran.