திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் சமூக ஊடகத்திற்கு எதிரான விழிப்புணர்வு

திருவள்ளூர்: பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக சமூக ஊடக போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் மாலதி செல்வக்குமார் முன்னிலை வகித்தார். இயக்குநர் சாய் சத்யவதி அனைவரையும் வரவேற்றார். எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறையானது, சமூக ஊடக அடிமையாதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி வாயிலில் இருந்து எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை மனிதச் சங்கிலி உருவாக்கம் மற்றும் மாணவர் பேரணி நடைபெற்றது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் பொது உரை நிகழ்த்தினர். பின்னர் மாணவர்களின் மைம் நிகழ்ச்சி நடைபெற்றது. “சமூக ஊடகங்கள் அவசியமான தீமை, சமூக ஊடகங்களின் இருண்ட பக்கங்களால் அமைக்கப்படும் பொறிகளுக்கு இளைய தலைமுறையினர் பெரும்பாலும் இரையாகின்றனர். எங்கள் இளைய தலைமுறையைக் காப்பாற்றவே இதை ஏற்பாடு செய்தோம்.”, என்று விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் சீனிவாசன் கூறினார்.

The post திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் சமூக ஊடகத்திற்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: