அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது அங்கு துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால் (40) என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து விக்ரம் அத்வாலை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த விக்ரம் அத்வால், அந்தப் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விமானப் பணிப்பெண்ணை கொன்றது துப்புரவு தொழிலாளி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? appeared first on Dinakaran.
