5 மாநில சட்டசபை தேர்தல் காங்கிரஸ் தேர்தல் குழு அமைப்பு: கார்கே, சோனியா, ராகுல் உள்பட 16 பேருக்கு இடம்

புதுடெல்லி: ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவை கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அமைத்து வெளியிட்டார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள். இந்த குழுவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி, சட்டீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ, முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தெலங்கானா எம்.பி உத்தம் குமார் ரெட்டி, கர்நாடக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், உத்தரகாண்ட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங், பீகார் எம்பி முகமது ஜாவேத், மாநிலங்களவை எம்பி அமீ யாஜ்னிக், முன்னாள் எம்பி பிஎல் புனியா, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஓம்கார் மார்க்கம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

The post 5 மாநில சட்டசபை தேர்தல் காங்கிரஸ் தேர்தல் குழு அமைப்பு: கார்கே, சோனியா, ராகுல் உள்பட 16 பேருக்கு இடம் appeared first on Dinakaran.

Related Stories: