பெண் அலுவலர்களிடம் வாட்ஸ்அப்பில் அத்துமீறல்; ‘பீர்’ குடிப்பியா? ஓட்டல் ‘புக்’ பண்ணட்டுமா?.. ஜொல்லு விட்ட தாசில்தார் அதிரடி சஸ்பெண்ட்

பாலி: ராஜஸ்தான் அரசின் ெபண் அலுவலர்களிடம் வாட்ஸ்அப்பில் அத்துமீறல் பதிவுகளை போட்ட தாசில்தாரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த தாசில்தார் பாபு சிங் ராஜ்புரோஹித் என்பவர், தனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. அதையடுத்து ஓய்வுபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், தாசில்தார் பாபு சிங்கை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘தாசில்தார் பாபு சிங் மீது 4 பெண் அலுவலர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் சிலரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் ஆபாசமான பதிவுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பிய வாட்ஸ்அப் பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பெண் ஊழியருக்கு அவர் அனுப்பிய பதிவில், ‘நீ நன்றாக வேலை செய்கிறாய். என்னோடு பேச ஏன் பயப்படுகிறாய்? என்னை உன்னுடைய நண்பராக ஏற்றுக் கொள். ஏன் எப்போதும் சோகமாக இருக்கிறாய்? உன்னுடைய அழகான முகம் எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உனக்கு லீவு வேண்டுமானால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்.

உன்னுடைய வேலையை நான் செய்கிறேன். பீர் குடிப்பியா? ஓட்டல் புக் பண்ணட்டுமா? காரில் ஜாலியாக செல்வோமா? உனது கண்களை பார்த்தால் எனக்கு போதையாக இருக்கிறது. உன்னுடைய கணவன் உன்னை எப்படி வைத்திருக்கிறார்? நான் எங்கு டிரான்ஸ்பர் ஆகி சென்றாலும் கூட, உன்னையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்’ என்றெல்லாம் ஜொல்லுவிட்டு எழுதியுள்ளார். இவரது ெசய்கையால் அதிர்ச்சியடைந்த பெண் அலுவலர்கள், தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லவே அச்சப்படுகின்றனர். அதனால் தாசில்தார் பாபுசிங் ராஜ்புரோஹித் விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை சென்றது. தொடர் விசாரணைக்கு பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்.

The post பெண் அலுவலர்களிடம் வாட்ஸ்அப்பில் அத்துமீறல்; ‘பீர்’ குடிப்பியா? ஓட்டல் ‘புக்’ பண்ணட்டுமா?.. ஜொல்லு விட்ட தாசில்தார் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: