குழிப் பணியாரம்

தேவையானவை

புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா 2 கப்
உளுந்து – 1/2 கப்
பாசிப்பருப்பு, வெந்தயம் – தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை

புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். மறுநாள் குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து காரச்சட்னியுடன் பரிமாறவும்.

The post குழிப் பணியாரம் appeared first on Dinakaran.