மாவட்டத்தில் இன்று நடக்க இருந்த குழந்தைகளுக்கான வைட்டமின் ‘ஏ’ டானிக் வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

 

கோவை, செப். 4: நாடு முழுவதும் தேசிய அளவில் வருடத்திற்கு இரண்டு முறை 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ டானிக் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆரோக்கியமான கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வைட்டமின் ‘ஏ’ டானிக் அளிக்கிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு இன்று (4-ம் தேதி) முதல் வரும் 9ம் தேதி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் மூலமாக மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 740 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ டானிக் வாங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ டானிக் வழங்கும் முகாம் நடக்க இருந்த நிலையில், இந்த முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post மாவட்டத்தில் இன்று நடக்க இருந்த குழந்தைகளுக்கான வைட்டமின் ‘ஏ’ டானிக் வழங்கும் முகாம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: