புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், பாரத்மாலா பரியோஜனா திட்டங்களின் மதிப்பு உயர்த்தப்பட்டு பிரதமரின் நெருங்கிய நபர்கள், கட்சிக்கு நிதி அளிப்பவர்களுக்கு திட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ரூ.1566 கோடியில் உருவாக்கப்படும் நெடுஞ்சாலை பணிக்கான டெண்டரில் பங்கேற்க தகுதி இல்லாத அதானி டிரான்ஸ்போர்ட்டுக்கு மோடி மேஜிக் மூலம் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
இந்த திட்ட பணியை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைத்தால் தான் பல்வேறு துறைகளில் அதானி குழுமத்தின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார்.
The post அதானி குழுமத்துக்கு டெண்டர் குறித்து விசாரிக்க வேண்டும் : காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.