என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நினைவு நாணயம்: ஜனாதிபதி முர்மு வெளியிட்டார்

புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் நினைவு நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழா நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மைய மண்டபத்தில் நேற்று வெளியிட்டார். பின்பு பேசிய அவர், “என்டிஆர் தனது தெலுங்கு படங்களின் மூலம் இந்தியா சினிமாவுக்கு புத்துயிரூட்டினார். ராமாயணம் மற்றும் மகாபாரதம் படங்களில் நடித்ததன் மூலம் அவர்களாகவே வாழ்ந்து காட்டினார்.

அவர் ராமராகவும், கிருஷ்ணராகவும் நடித்ததை தொடர்ந்து மக்கள் அவரை கடவுளாக வழிபடத் தொடங்கினார்கள். அவர் தனது படங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கையை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார். தனது படங்களின் மூலம் சமூக நீதி, சமத்துவத்தை பரப்பினார். இந்திய அரசியலிலும் தனது தனித்திறமை மற்றும் கடின உழைப்பினால் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். அவர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அவை இன்றளவும் நினைவுகூறப்படுகின்றன. அவர் மக்கள் மனதில் குறிப்பாக தெலுங்கு பேசும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார்,” என்று கூறினார்.

The post என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நினைவு நாணயம்: ஜனாதிபதி முர்மு வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: