மதுரை பெரியார் பாசன பகுதியில் முதல் போக சாகுபடிக்கு ஏற்ற மாற்று பயிர் திட்டம்

மதுரை, ஆக. 27: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நெல், பயறு வகை பயிர்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள் களப்பயிற்சி மற்றும் நிலைய பயிற்சிகள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அலங்காநல்லூர் வட்டம் மணியஞ்சி கிராம விவசாயிகளுக்கு ‘பயறு வகை பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் களப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும் மற்றும் மண்ணியல் துறை வேளாண் விஞ்ஞானி கிருஷ்ணகுமார் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து உர நிர்வாகம் குறித்தும் எடுத்துரைத்தனர். குறிப்பாக மதுரை பெரியார் பாசன பகுதியில் பயறு வகை பயிர்களை மாற்று பயிர் திட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்காத சூழ்நிலையில் எப்படி பயிர் செய்வது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கான பயறு விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

The post மதுரை பெரியார் பாசன பகுதியில் முதல் போக சாகுபடிக்கு ஏற்ற மாற்று பயிர் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: