ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி: மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார்

 

கோவை, ஆக.27: 57ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், இந்தியன் வங்கி அணியை எதிர்த்து சுங்க அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்து இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடியது.

இதில் இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி 91 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வருமான வரி அணியை எதிர்த்து பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் வருமான வருமான வரி அணி 82 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் பிரகாசம், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி: மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: