திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழாவில் சப்பர பவனி கோலாகலம்

உடன்குடி : ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழாவில் நேற்றிரவு சப்பர பவனி நடந்தது.திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை, இயேசுவின் திருஇருதய அற்புத கெபியில் 95வது ஆண்டு பெருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலையில் பெருவிழா கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

அமலன் மறையுரையாற்றினார். மறுநாள் காலை 6.10 மணிக்கு திருயாத்திரை திருப்பலி இலங்குளம் பங்குதந்தை பிரான்சிஸ் கிறிஸ்துராஜா தலைமையில் நடந்தது. முற்பகல் 11.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, தூத்துக்குடி பள்ளிகளின் கண்காணிப்பாளர் பிராங்ளின் தலைமையில் நடந்தது. மாலை 6.30 மணிக்கு அழகப்பப்புரம் பங்குதந்தை செல்வராயர் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. 18ம் தேதி தாளமுத்துநகர் துணை பங்குதந்தை அமல்ராஜ், கிருபாகரன், சுதர்சன் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, சிறுமலர் குருமடம் அதிபர் உபர்ட்டஸ் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

கடந்த 19ம் தேதி மரியன்னை மெட்ரிக் . மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜயன், டைட்டஸ், டிமல், லெரின் டிரோஸ், ரபிஸ்டன், மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் ரூபஸ் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், 20ம் தேதி காலை கோட்டார் முன்னாள் ஆயர் ரெமிஜியூஸ், பிரேமில்டன், நிலவன், சகேஷ் சந்தியா, செட்ரிக் பீரிஸ் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட தலைமை செயலாளர் ஜான்செல்வம் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 21ம் தேதி காலை கல்லாமொழி முன்னாள் பங்குதந்தை கிங்ஸ்லி, இருதயராஜ், பிரதீஷ், அலாய்சியஸ், பபிஸ்டன், ஷிபாகர் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் திருச்சி பவுல் குருமடம் அதிபர் ஆண்ட்ரூ டிரோஸ் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

22ம் தேதி இடிந்தகரை துணை பங்குதந்தை பாலன், பென்சிகர், ஜான்பிரிட்டோ ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் கீழவைப்பார் பங்குதந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. 23ம் தேதி வேம்பார் பங்குதந்தை ரோஷன், இன்பன்ட், விவேக் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

நேற்று (24ம் தேதி) அருட்பணி சென்னை ஜான்சன், கருத்தபிள்ளையூர் பங்குதந்தை வினோத்பால்ராஜ் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா மாலை ஆராதனை மற்றும் மறையுரை நடக்கிறது. தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம், தூத்துக்குடி தூய பனிமய அன்னை அதிபர் குமார்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரவு 9மணிக்கு சப்பர பவனி நடந்தது. இதில் ஆலந்தழை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று (25ம் தேதி) காலை 5.15 மணிக்கு முதல் திருப்பலி, தூத்துக்குடி தூய பனிமய அன்னை அதிபர் குமார்ராஜா தலைமையில் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.

காலை 10 மணிக்கு ரூபஸ் தலைமையில் திருப்பலி, 11.30 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் வார வழிபாடு, திருப்பலி ஆகியவை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மணவை மறைவட்ட முதன்மை குரு பென்சிகர் தலைமையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

The post திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழாவில் சப்பர பவனி கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: