வடக்கு குறு மைய கூடைப்பந்து போட்டி: 2 பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்திய நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி

 

திருப்பூர், ஆக.22: திருப்பூர் வடக்கு குறுமைய கூடைப்பந்து போட்டியில் இரண்டு பிரிவுகளில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தினர். திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான கூடைப்பந்துப் போட்டி திருப்பூர் குமார்நகரில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியி்ல் நடந்து வருகிறது. நேற்று 14,17 மற்றும் 19 வயது மாணவர்களுக்கான கூடைப்பந்து மற்றும் எறிப்பந்துப் போட்டி நடைப்பெற்றது. போட்டிகளை இன்பன்ட் பள்ளி தாளாளர் அருட்தந்தை எட்வர்டு ஞானசேகரன் தொடங்கி வைத்தார். கூடைப்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன.

இதில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி முதலிடமும், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றதில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி முதலிடமும், இன்பன்ட் ஜீசஸ் இரண்டாமிடமும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றதில் இன்பன்ட் ஜீசஸ் முதலிடமும், ஏவிபி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

இதேபோல எறிப்பந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றதில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி முதலிடம், ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயதுக்கு உட்பட்பட்டோர் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றதில் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி முதலிடம், கொங்கு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 9 அணிகள் பங்கேற்றதில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி முதலிடம், பிஷப் உபகாரசாமி பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.

The post வடக்கு குறு மைய கூடைப்பந்து போட்டி: 2 பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்திய நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: