திருவிளையாட்டம் கிராமத்தில் அறுவடை செய்த வயல்களில் வாத்துகள் மேய்க்க ரூ.1 லட்சம்

தரங்கம்பாடி,ஆக.18: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் குறுவை அறுவடை செய்த வயல்களில் வாத்துகளை மேய்க்க ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வசூல் செய்யபட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் நலச்சங்க தலைவர் துரைராஜ் கூறும்போது, திருவிளையாட்டம் கிராமத்தில் குறுவை சாகுபடி அறுவடை செய்யபட்டுள்ள வயல்களில் வாத்துகளை மேய்க்க அனுமதி கொடுத்துள்ளோம். அதற்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாத்து உரிமையாளரிடம் வசூலிப்போம். அந்த பணத்தை கொண்டு திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வாருவோம் என்றார்.

The post திருவிளையாட்டம் கிராமத்தில் அறுவடை செய்த வயல்களில் வாத்துகள் மேய்க்க ரூ.1 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: