மாரடைப்பால் விமானி உயிரிழப்பு

நாக்பூர்: நாக்பூர் விமான நிலையத்தில் மாரடைப்பால் விமானி உயிரிழந்தார். தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகபணியாற்றி வந்தவர் மனோஜ் சுப்பிரமணியம் (48). நேற்று நாக்பூர் விமான நிலையத்தில் மனோஜ் சுப்பிரமணியம் இயக்கும் விமானம் நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்தது. மதியம் 12 மணியளவில், விமானி மனோஜ் சுப்பிரமணியம், விமானத்தை இயக்க செல்வதற்காக வந்தார். விமானத்துக்குள் செல்லும் நுழைவாயில் அருகே வந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post மாரடைப்பால் விமானி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: