இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘பிரதமர் மோடியிடம் பெரும் அச்சங்கள், சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பின்மை உள்ளன. குறிப்பாக நமது நாட்டின் முதல் மற்றும் நீண்ட கால பிரதமரான நேருவின் பாரம்பரியத்தை மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பது என்பதை ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளார். இந்த பெயர் மாற்றம் உண்மையிலேயே அற்பத்தனம், கோபத்தின் வெளிப்பாடு. இடைவிடாத தாக்குதல்கள் இருந்த போதிலும், நாட்டின் சுதந்திரத்தில் நேருவின் மாபெரும் பங்களிப்பும், இந்திய தேசிய அரசின் ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல் சார்ந்த அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைகளையும் உலகம் எப்போதும் காணும். அவர் தொடர்ந்து எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பார்’’ என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் அளித்த பேட்டியில், ‘‘மோடி பாதுகாப்பின்மை நிறைந்த மனிதர். ஏனென்றால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அவர் எதுவும் செய்யவில்லை. இந்த வரலாறுதான் உங்களை நினைவுகூறும். வரலாறுகள் ஒருபோதும் மாறாது, மாற்றவும் முடியாது. நீங்கள் (மோடி) விரும்புவதைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்’’ என்றார்.
The post நேரு அருங்காட்சியகம் பெயர் அதிகாரப்பூர்வமாக மாறியது: காங். தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.
