பாரத மாதா- ஒவ்வொரு இந்தியனின் குரல்: சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ராகுல் உருக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் ராகுல் தனது சுதந்திர தின விழா வாழ்த்து செய்தியில், ‘‘என் அன்பின் பொருள் திடீரென தன்னை வெளிப்படுத்தியது. என் அன்பிற்குரிய பாரத மாதா ஒரு நிலம் அல்ல. அது எண்ணங்களின் தொகுப்பும் இல்லை. அது ஓரு குறிப்பிட்ட கலாச்சாரமோ, வரலாறு அல்லது மதம் இல்லை. மக்களால் ஒதுக்கப்பட்ட சாதியும் இல்லை. ஒவ்வொரு இந்தியனின் குரலாக இந்தியா இருந்தது. எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், பலமாக இருந்தாலும் சரி. அனைத்து குரல்களிலும் ஆழமாக மறைந்திருந்த மகிழ்ச்சியும், பயமும், வலியும் இந்தியாவாகவே இருந்தது.

இந்தியாவின் குரலை கேட்பதற்கு என் சொந்த குரல், என் ஆசைகள், என் லட்சியங்கள் மவுனமாக வேண்டும். இந்தியா தன் சொந்தமான ஒருவரிடம் பேசும். ஆனால் ஒருவர் பணிவாகவும், அமைதியாகவும் இருந்தால் மட்டுமே அது பேசும். எவ்வளவு எளிமையாக இருந்தது. வார்த்தைகள் இதயத்தில் இருந்து வந்தால் அவை இதயத்திற்குள் நுழையும். நான் எனது யாத்திரையை நிறுத்த வேண்டும் என்பதை பற்றி நினைக்கும்போதெல்லாம் யாரோ ஒருவர் வந்து அதனை தொடருவதற்கான ஆற்றலை எனக்கு பரிசளிப்பார். அது ஒரு அமைதியான ஆற்றல் எனக்கு உதவுவது போல் இருந்தது. இருண்ட காட்டில் மின்மினி பூச்சிகள் போன்று அது அனைத்து இடத்திலும் இருந்தது. உண்மையில் எனக்கு தேவைப்படும்போதெல்லாம் அது உதவியது மற்றும் வழிகாட்டியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாரத மாதா- ஒவ்வொரு இந்தியனின் குரல்: சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ராகுல் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: