புது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் இணைய பத்திரிகையாளர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் அதிர்ச்சி

புதுடெல்லி: டெல்லியில் புது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் இணைய பத்திரிகையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். டெல்லியின் பாண்டவ் நகர் பகுதியில் வசிக்கும் பிரபல செய்தி சேனலின் இணையதள பத்திரிக்கையாளர் ஆகாஷ்தீப் சுக்லா (31) என்பவர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற டெல்லி போலீசார், வீட்டின் கதவை உடைத்து ஆகாஷ்தீப் சுக்லாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் அம்ருதா குகுலோத் கூறுகையில், ‘இணையதள பத்திரிகையாளர் ஆகாஷ்தீப் சுக்லா, தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி பாண்டவ் நகர் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்றோம். ஆனால் வீட்டின் ஒரு அறை உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்பு துறையினர் உதவியுடன் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆகாஷ்தீப் சுக்லாவின் உடலை கைப்பற்றினோம். முதற்கட்ட விசாரணையில், தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.

அவரது மனைவி திருமண பார்ட்டி வைக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில், ஆகாஷ்தீப் தனது அறையை பூட்டிக் ெகாண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் ெதாடர்பாக ஆகாஷ்தீப்பின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post புது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் இணைய பத்திரிகையாளர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: