அரசு ஊழியர் சங்க மாநாடு

 

பல்லடம். ஆக.15:தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முதல் பிரதிநிதிகள் மாநாட்டின் 2ம் நாள் நிகழ்ச்சி பல்லடத்தில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் லெட்சுமிநாராயணன், மாநில பொருளாளர் வெங்கடேசன் பேசினார்கள். மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிர்வாகிகள் முன் மொழிந்தனர். காலியாக உள்ள மாநில நிர்வாகிகள் பொறுப்பிற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார். மாநாட்டில், சிபிஎஸ்யை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படியை உரிய காலத்தில் உரிய சதவீதத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post அரசு ஊழியர் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: