பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட 333 பொருட்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கிடைத்த தொன்மையான பொருட்களை பலரும் நேரில் பார்வையிட்டு வியப்படைந்து வருகின்றனர். புதுக்கோட்டை அடுத்துள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 மீட்டர் நீள, அகலத்தில் 14 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கம் ஆபரணம் உள்பட 3 தொல் பொருட்கள் மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தப்பட்ட பானை ஓட்டின் வட்ட சில்லுகள், 6 குறியீடு உள்ளிட்ட 333 பொருட்கள் கிடைத்துள்ளன.

இவற்றை பொற்பனைக்கோட்டை ஆதிமுனீஸ்வரர் கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் பலரும் நேரில் கண்டு வியப்படைந்தனர். பொற்பனைக்கோட்டையில் கிடைத்துள்ள பொருட்களின் மூலம் பழங்காலத்திலேயே எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் பண்டைய தமிழர்கள் வணிக தொடர்பு கொண்டுள்ளதற்கான சான்று கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட 333 பொருட்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்துடன் பார்வையிடும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: