நிதிஷின் ஆணவத்தினால் கூட்டணியில் இருந்து சிராக் வெளியேறினார்: ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு

பாட்னா: நிதிஷ் குமாரின் ஆணவத்தால்தான் முன்பு சிராக் பாஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேறினார் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்றுமுன்தினம் பேசும்போது, 2020ம் ஆண்டு பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பல தொகுதிகளில் தோல்வியடைய பாஜவின் ஏஜென்டாக செயல்பட்ட ஒருவர் தான் காரணம் என லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சி தலைவர் சிராக் பாஸ்வானை மறைமுகமாக குற்றம்சாட்டி பேசினார்.

இந்நிலையில்,இது பற்றி ஒன்றிய அமைச்சர் நித்யானந்த்ராயிடம் நேற்று கேட்டபோது,‘‘பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் பல இடங்களில் தோல்வியடைவதற்கு மக்களுடான தொடர்பை நிதிஷ் இழந்ததுதான் காரணம். நிதிஷின் ஆணவத்தால்தான் கூட்டணியில் இருந்து அப்போது சிராக் வெளியேறினார்’’ என்றார். 2020 தேர்தலில் ஐக்கிய ஜனதாதளத்தை எதிர்த்து சிராக் தீவிர பிரசாரம் செய்தார். இதில் நிதிஷ் கட்சி 43 இடங்களில் வென்றது.

The post நிதிஷின் ஆணவத்தினால் கூட்டணியில் இருந்து சிராக் வெளியேறினார்: ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: