திருவனந்தபுரம்: லட்சத்தீவு நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்துள்ள நடவடிக்கையை கண்டித்து தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ஹம்துல்லா சையத் எச்சரித்துள்ளார். லட்சத்தீவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடையை நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் எம்பியுமான ஹம்துல்லா சையத் கூறுகையில், ‘‘நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய சீருடை மற்றும் ஆடை கட்டுப்பாடானது இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தீவில் உள்ளார்ந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை சீரழிப்பதாக உள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர் ஜனநாயக போராட்டங்களை தீவிரப்படுத்தும்” என்றார்.
The post லட்சத்தீவில் பள்ளியை புறக்கணித்த மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக காங். எச்சரிக்கை appeared first on Dinakaran.