அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் பலி… 2,000த்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். 12,000த்திற்கும் மேற்பட்டோர் தீவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவில் உள்ள மவுவி தீவு நகரமான லஹைனாவில் கடந்த செவ்வாய் கிழமை பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதைத் தொடர்ந்து தீவில் இருந்து காட்டுத் தீ நகர் பகுதிக்கும் பரவியது. காற்று பலமாக வீசியதால் தீப்பிழம்புகள் வேகமாக பரவின. இதில் இருந்து தப்பிக்க மக்கள் கடலில் குதித்தனர்.

சிலர் தீயில் கருகினர். காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 53 பேர் இறந்த நிலையில், 35,000த்திற்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. காட்டுத் தீயால் லஹைனாவில் 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. தீயால் பாதிக்கப்பட்ட 2000த்திற்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சுலுவை சங்கம் அடைக்கலம் அளித்துள்ளது. தற்போது சூறைக்காற்றின் வேகம் குறைந்துவிட்டதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். தீயை விரைந்து அணைத்து மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோபிடன் உத்தரவிட்டுள்ளார்.

The post அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் பலி… 2,000த்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: